• முகப்பு
  • pondichery
  • சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே பிரச்சனை தான்.

சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே பிரச்சனை தான்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரியில் மாநில திட்டக்குழு கூட்டம்  ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மார்ச் மாத இறுதியில் 3613 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை ஒட்டி முழு  பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆலோசனை மூன்று மணி நேரம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த  ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பட்ஜெட் தொடர்பான நடைபெற்றது. ஆரோக்கியமான விவாதமாக இருந்தது.  மேலும் எந்தெந்த துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்குவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு வருகிற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் என்றும், இது ஒரு நல்ல பட்ஜெட் ஆக இருக்கும் என தெரிவித்தார். இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் தங்களுக்கு அவமரியாதை செய்யப்பட்டது, குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிலில் இன்று சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தாக கூறிய அவர், கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து இருந்து போத, இங்கே அமரக்கூடாது என்றும் அருகில் உள்ள இடத்தில் அமர ஒருவர் சொன்னார். அதனை அவமானமாக நினைக்கவில்லை என்றார். மேலும் பேசிய அவர்,  சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்சனை தீர்க்கப்படும். ஆனால் பிரச்சனை தான் வருகிறது. அவர்களுடைய (தீட்சிதர்கள்) பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும். மக்களோட பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு சிவன் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்றார். பேட்டி 1; தமிழிசை, ஆளுநர்,புதுச்சேரி  பேட்டி 2; சிவா, எதிர்கட்சி தலைவர் பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended