• முகப்பு
  • district
  • கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் தனது போர்டு வைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு.

கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் தனது போர்டு வைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் திருமண்டங்குடியிலுள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் அவர்கள் பெயரில் சர்க்கரை ஆலை வாங்கிய கடன் என 450 கோடி ரூபாய் பாக்கி உள்ள நிலையில் இன்று அந்த ஆலையில் கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் தனது போர்டு வைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு. இன்று பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்தனர் விவசாயிகளை பேச்சுவார்த்தை அழைக்காமல் தனியார் நிறுவனம் போர்டு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகளும் சுந்தரபெருமாள் கோவில் அருகில் உள்ள உத்தாணி அருகில் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு. கும்பகோணம் அருகே கபிஸ்தலம் திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகையை இந்த நிறுவனம் வாங்கி வைத்திருந்தது. மேலும் கரும்பு விவசாயிகள் பெயரில் சுமார் 300 கோடி ரூபாய் பல்வேறு வங்கிகளில் கடனாகவும் இந்த சர்க்கரை ஆலை பெற்றது. இதனைத் தொடர்ந்து, சர்க்கரை மூடப்பட்டது. விவசாயிகள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திரும்பப் பெறக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த ஆலையில் கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் தனது பணியை தொடங்குவதற்காக கடந்த வாரம் இந்த ஆலையில் கணபதி ஹோமம் போன்றவற்றை நடைபெற்றது. இந்த தகவல் பரவியதும் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் அங்கு கூடினர். எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுத்துவிட்டு நீங்கள் எந்த நிறுவன வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றும்,பாக்கி உள்ள நிலையில் புதிதாக ஆலையை தொடங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் கரும்பு விவசாயிகள் கூறியதால் அங்கு பரபரப்பு அதிகமானது. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கால்ஸ் நிறுவனத்திடம் விவசாயிகள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் தேதி சர்க்கரை ஆலை வளாகத்தில் கரும்பு நிலுவை தொகை உள்ள விவசாயிகள் அனைவரையும் வரும்படி கால்ஸ் டிஸ்டிலரீஸ் அழைப்பு விடுத்துள்ளனர். அன்றையதினம் ஒவ்வொரு விவசாயிகள் பெயரில் எவ்வளவு நிலுவைத்தொகை இருக்கிறது என்ற விவரத்தை தெரிவிப்பதாகவும் அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் அவர்கள் பெயரில் சர்க்கரை ஆலை வாங்கிய கடன் என 450 கோடி ரூபாய் பாக்கி உள்ள நிலையில் இன்று அந்த ஆலையில் கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் தனது போர்டு வைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு. இன்று பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்தனர் விவசாயிகளை பேச்சுவார்த்தை அழைக்காமல் தனியார் நிறுவனம் போர்டு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகளும் சுந்தரபெருமாள் கோவில் அருகில் உள்ள உத்தாணி அருகில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended