• முகப்பு
  • india
  • வங்கியில் கடன் மற்றும் கிரெடிட் கார்டு வாங்கப்போறீங்களா.....

வங்கியில் கடன் மற்றும் கிரெடிட் கார்டு வாங்கப்போறீங்களா.....

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வங்கி கடன் கிரடிட்கார்டு வாங்கி உள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள் 1. வங்கியில் கடன், கிரடிட் கார்டு, கல்விக்கடன் தனி நபர் கடன் வசூல் என எதுவாக இருந்தாலும் எல்லாமே சிவில் நடைமுறை தான். 2. எக்காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் மீது கிரிமினல்நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. இது ரிசர்வ் வங்கியின் வழிமுறை. 3. கடனின் தவணைகள் தாமதம் ஆனால், வங்கி முறைப் படி பணத்தை கேட்கலாம் அல்லது கடிதம் அனுப்பலாம், மாறாக கடன்வாங்கியோரின் வீட்டினுள் நுழைந்து பணம்வசூலிக்க முயலுவது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 441 யின் படி குற்றம். 4. பணத்தை கேட்டோ, வசூலிக்கவோ வங்கிஊழியர்களோ, முகவர்களோ செல்போனில் அவதூறாகபேசினால், IPC Section 499 படி மிரட்டினால் IPC Section 503 படி வீட்டின் வெளியே நின்றுபலர் முன்னிலையில் கெட்டவார்த்தை பேசினால் IPC section 294 B படி குற்றம் ஆகும். 5. கடன் தவணையக்கேட்டு தொடர்ந்து வங்கி தொல்லைக்கொடுத்தால் மேற்கண்டபிரிவுகளை குறிப்பிட்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். 6. அதேநேரம் உங்கள்பகுதியில் உள்ள சிவில்நீதிமன்றத்தில் Order VII, Rule 1 of Civil Proceedure Code யில் மனு தாக்கல்செய்து, Order XXXIX, Rule 1 of Civil Proceedure Code யில் தடை உத்தரவை பெறலாம். 7. கடன்த்தவணை நிலுவைத்தொகையை வசூலிக்க வங்கி சிவில்நடைமுறையை மட்டுமே பயன் படுத்த வேண்டும், ஊழியர்களை, முகவர்களை கொண்டு மிரட்டுவதுக்குற்றம் *அனுபவஸ்தன்*

VIDEOS

RELATED NEWS

Recommended