• முகப்பு
  • pondichery
  • புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதன் மூலம் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதன் மூலம் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி அரசு சார்பில் தொழில்முனைவோர்கள் மாநாடு மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெறுகிறது. தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடிய தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம், செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர்... தேர்தல் நேரத்தில் புதுச்சேரிக்கு வருகை புரிந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்று கூறியிருந்தார். அதற்காக புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியைக் கொண்டுவர ஆளும் அரசு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். தொழில்முனைவோர் மாநாட்டில் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த 28 கம்பெனிகளும், இந்தியா பிரஞ்ச் ஒப்பந்தம் பெற்ற 58 கம்பெனிகள் என 86 கம்பெனிகளின் தலைமை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநாட்டில் தொழில் தொடங்க உள்ள உரிய சூழ்நிலை அதனால் ஏற்படும் இடர்பாடுகள் அவற்றை கலைவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரியில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் ஆவலாகஉள்ளார்கள் என்றார். தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், தடையில்லா மின்சாரம்,, குடிநீர் வசதி, நிலம் ஆர்ஜிதம் செய்து வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் என்று கூறிய நமச்சிவாயம், அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என்று தெரிவித்தார். புதிய தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரும்போது வேலைவாய்ப்பு பெருகும் பொருளாதாரம் மேம்படும் என்றும் பழைய தொழிற்சாலைகளை பாதுகாப்பதோடு புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவதே அரசின் கடமை என்று தெரிவித்த அவர் புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கான சூழல்களை புதுச்சேரி அரசு உருவாக்கி உள்ளது. சேதராப்பட்டில் கையகப் படுத்தப் பட்டுள்ள 150 ஏக்கர் நிலத்தை தொழில் முனைவோர்களுக்கு கொடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உடனடியாக 10 கம்பெனிகள் தொழில் தொடங்க ஆர்வம் தெரிவித்து உள்ளார்கள், சுற்றுச்சூழல் பாதிக்காமல் நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அப்படி தொடங்கப்படும் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப் படும், தொழிற்சாலைகளை கொண்டு வருவதன் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளதாகவும்,புதுச்சேரிக்கு இந்த தொழிற்சாலைகள் வருவதன் மூலம் 2 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்றார். பேட்டி; நமச்சிவாயம், தொழில்துறை அமைச்சர் புதுச்சேரி

VIDEOS

RELATED NEWS

Recommended