• முகப்பு
  • district
  • பக்ரீத் பண்டிகை யொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் மூன்று மணிநேரத்தில் 4-கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை !!!

பக்ரீத் பண்டிகை யொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் மூன்று மணிநேரத்தில் 4-கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச் சந்தை நடப்பது வழக்கம் வழக்கமாக சந்தையில் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்நிலையில் வரும் ஞயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ள நிலையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது காலை ஏழு மணிக்கு தொடங்கிய சந்தையில் திண்டுக்கல் மதுரை திருச்சி சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்துள்ளனர். 10000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று மணி நேரத்தில் 4-கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் வரை நடைபெற்றும் சந்தையில் வர்த்தகம் ஐந்து கோடிக்கு மேல் கூடுதலாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended