நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தின் விழிப்புணர்வு பேரணி.

சுரேஷ்பாபு

UPDATED: May 29, 2023, 2:28:25 PM

தமிழக அரசின் உத்தரவின் படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக கிராமப்புறங்களை தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் துவங்கப்பட்ட "நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தின் மூலமாக பொது இடங்களை சுத்தம் செய்தல், சுய உதவி குழுக்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மையை துரிதப்படுத்துதல், தண்ணீரின் தரத்தை பரிசோதனை செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் திறம்பட நடந்தேறியுள்ளதைத் தொடர்ந்து,

நம்ம ஊரு சூப்பர் இயக்கத்தின் அடுத்தகட்ட விழிப்புணர்வு நடவடிக்கையாக "ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்ப்பது" குறித்த பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளியில் இவ்விழிப்புணர்வு செயல்பாடுகளில் திறம்பட பங்கேற்ற பங்கேற்பாளர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.‌

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பா.சீபாஸ் கல்யாண், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் .செ.ஆ.ரிஷப் , திருவள்ளூர் உதவி காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் கோ.மலர்விழி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் .ராஜவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் .ரூபேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவுஸ்ரீதர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் கா.விஜயா,

மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவ மாணவியர்கள் மகளிர் சுய உதவி குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended