நம்ம ஊரு சூப்பரு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

நா.வேலாயுதம்

UPDATED: May 13, 2023, 7:31:24 AM

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் மோட்சகுளம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர் MB.கனகராஜ் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அங்கு கடைவீதிகளில் கடைக்கு கடை நோட்டீஸ் கொடுத்தும் கிராமம் முழுதும் ஒவ்வொரு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கியும் நாம் கடைக்கு செல்லும்போது கூட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் மஞ்சப்பை பயன்படுத்துங்கள், பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதே!

மண்வளத்தை கெடுக்காதே!!, பிளாஸ்டிக்கை விடு! துணி பையை எடு!! பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விளக்கங்களை கிராம பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லியும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை விவரித்தும் கோஷம் எழுப்பியும் சென்றனர்.

மேலும் உடன் மோட்சகுளம் ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended