காட்பாடி விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்!

வாசுதேவன்

UPDATED: May 6, 2023, 10:27:16 AM

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் சரகம், விருதம்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (சட்டம்- ஒழுங்கு) பணியாற்றுபவர் ஆதர்ஷ்.

இவர் ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற பொதுமக்கள், முதியோர் மற்றும் கண் பார்வை இழந்தவர்கள் என வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் சுமார் 500 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கி தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ். அதேபோன்று நேற்று மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் காட்பாடி காந்திநகர் கல்யாண மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகில் ஏழை, எளியவர்களுக்கும், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் என சுமார் 500 பேர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மதிய உணவு அளித்து மகிழ்ந்தார் .

காவல் உதவி ஆய்வாளருக்கு உறுதுணையாக விருதம்பட்டு முன்னாள் ஊர் நாட்டாண்மை சுரேஷ் உதவி புரிந்தார்.

இப்படி தொடர்ந்து கருணையின் நிறம் காக்கி என்பதை பொதுமக்களுக்கும் , வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தனது செயல் மூலம் நிரூபித்து வருகிறார் இந்த காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவரது பணி தொடர வேண்டும் என்று இவரது கைகளால் மதிய உணவை பெற்றுக் கொண்ட ஆதரவற்ற முதியவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் நெஞ்சார தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended