• முகப்பு
  • cinema
  • அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் நள்ளிரவு பார்ட்டியில் படுநெருக்கமாக இருந்து உள்ளனராம் ?

அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் நள்ளிரவு பார்ட்டியில் படுநெருக்கமாக இருந்து உள்ளனராம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கிவந்த அனிருத் தற்போது தான் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு இசையில் கவனத்தைச்செலுத்திவந்தார். இந்நிலையில் அவர் பிரபலநடிகை கீர்த்திசுரேஷை காதலித்து வருவதாக சொல்லப் படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்ற ஒரு தகவல் பரபரப்பை கிளப்பியது. அதற்கு ஏற்றார்போல் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் போட்டோக்களும் வெளிவந்தது. மேலும் கீர்த்திசுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்தது கூட அனிருத்துக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும் என்பதற்கு தானாம். ஆனால் இதைப்பற்றி கேட்டால் இருவரும் எங்களுக்குள் இருப்பது வெறும்நட்பு மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் படுநெருக்கமாக இருந்து உள்ளனராம். அதனால் தற்போது மீண்டும் இவர்களைப்பற்றிய பேச்சு கிளம்பியிருக்கிறது. இந்த தகவலால் கீர்த்திசுரேஷ் மற்றும் அனிருத் இருவரின் குடும்பத்தினரும் பெரும்சங்கடத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் தற்போது அனிருத்திற்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முயற்சிசெய்து வருகின்றனர். திருமணமும் கைக் கூடி வரும்நிலையில் இப்படி வெளிவந்த செய்தி அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் கீர்த்திசுரேஷ் தற்போது சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார். இந்த சமயத்தில் இது போன்ற செய்திகள் அவருடைய சினிமா வாழ்வை பாதிக்கும் என்ற கவலை அவருடைய அம்மாவுக்கு இருக்கிறதாம். இப்படி இரு குடும்பத்தினரும் ஆளுக்கொரு யோசனையில் இருக்க சம்பந்தப் பட்ட அந்த இருவர் மட்டும் தங்கள்போக்கில் ஜாலியாக இருக்கின்றனர். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended