• முகப்பு
  • கல்வி
  • ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து பாராட்டு விழா.

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து பாராட்டு விழா.

செ.சீனிவாசன்

UPDATED: May 28, 2023, 7:31:09 AM

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் தலைமை ஆசிரியரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான கே.ஆர் ராஜேந்திரன் 26 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இவர் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் மாணவர்களுக்கு கல்வி மட்டும் இன்றி, பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுக் கொடுத்து பலர் நல்ல வேலைகளில் உள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கு முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பணி ஓய்வு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி வாட்ஸ் அப் குழு வாயிலாக அனைவரும் ஒன்றிணைந்து அவர்களின் நிதி பங்களிப்போடு வலிவலத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் பணி நிறைவு பாராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தெ. ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளி ஆட்சி மன்ற குழு தலைவர் அ.மன அழகன் பங்கேற்று ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு மாலை அணிவித்து சந்தன மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்க மோதிரம் அணிவித்து பணி நிறைவு பாராட்டு விழா தொடர்பான வாழ்த்து மடல் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து ஆசிரியர்களும் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் அவருக்கு சால்வை அணிவித்ததோடு, காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்ற நிகழ்ச்சி சம்பவம் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

தொடர்ந்து ஏற்புரையேற்ற ஆசிரியர் பேசும்போது எந்த ஒரு மனிதரும் சொர்க்கத்தை நேரில் காண முடியாது ஆனால் சொர்க்கத்தை நேரில் காணும் அளவிற்கு இந்த நிகழ்வு இருந்ததாக அவர் கண்கலங்கி, பெருமிதத்தோடு மகிழ்ச்சி தெரிவித்தது அனைவரையும் கண்கலங்க செய்தது.

தொடர்ந்து ஆசிரியரின் உழைப்பை பாராட்டு விதமாக இருவர் பாடல் பாடி அசத்தியது அங்குள்ள பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆசிரியரை ஊர்வலமாக காரில் ஏற்றி முன்னாள் மாணவர்கள் உற்சாகமாக நடனமாடியபடி வீட்டிற்கு வரை சென்று வழி அனுப்பி வைத்தனர்.

நாகை அருகே 26 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரது அன்பிற்காக, அவருக்கு முன்னாள் மாணவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சி சம்பவம் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended