• முகப்பு
  • குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும், எச்சரிக்கை..

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும், எச்சரிக்கை..

ராஜ்குமார்

UPDATED: May 11, 2023, 4:31:44 PM

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், குற்ற வழக்குகள் மீதான நடவடிக்கைகள் குறித்தும்,

மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த மூன்று நாட்களாக அதாவது 09.05.2023, 10.05.2023 மற்றும் 11.05.2023 ஆகிய தேதிகளில் தென்மண்டல் காவல்துறை தலைவர் மேற்கண்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, திருநெல்வேலி சரசு காவல் துனைத்தலைவர் பிரவேஷ் குமார்,

மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களான சிலம்பரசன் திருநெல்வேலி மாவட்டம், சாம்சன் தென்காசி மாவட்டம், முனைவர். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்டம், ஹரி கிரர் பிரசாத், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உட்பட நிலுவையிலிருந்த 65,000 வழக்குகளில் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டதின் விளைவாக அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணை விரைவில் நடத்தப்பட்டு, நீதி நிலைநிறுத்தப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் குற்றம் இழைப்பவர்கள் மறுபடியும் அக்குற்றங்களை செய்யாமல் தடுக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

குற்ற வழக்குகளில் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கைகள்:-

குண்டர் தடுப்பு சட்டம்:

இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 44 குற்றவாளிகளும், தென்காசி மாவட்டத்தில் 33 குற்றவாளிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 65 குற்றவாளிகளும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 குற்றவாளிகளும் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 169 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,

ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கைகள் மேலும், திருநெல்வேலி சரகத்தில் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ரௌடிகளின் பட்டியல் ஒன்றை மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களால் தயார் செய்யபட்டு அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்கப்படுவதுடன், குற்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக நிர்வாகதுறை நடுவர் முன்பாக ஆஜர் படுத்தி நன்னடத்தை பிணையப் பத்திரமும் பெறப்பட்டுள்ளது.

இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 603 ரவுடிகள், தென்காசி மாவட்டத்தில் 299 ரவுடிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 800 ரவுடிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 554ரவுடிகள் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 2256 ரவுடிகள் மீது நிர்வாகதுறை நடுவர் மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

இதுபோன்ற ரவுடி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள் இந்த ஆண்டில் இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 714 பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள், தென்காசி மாவட்டத்தில் 552 பினையில் வெளிவரமுடியாத பிடியாணைகள்,

தூத்துக்குடி மாவட்டத்தில் 1113 பிளைாயில் வெளிவரமுடியாத பிடியாணைகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 919 பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 3298 பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள் குற்றவாளிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கஞ்சா வழக்குகள் (Ganja Cases)?

நடப்பாண்டில் இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13.704 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 43 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

86 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 14 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 28 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 71 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 16.501 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 37 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 116 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 8 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 42 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 76 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 15.232 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 40 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 246 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 01 கஞ்சா வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13.579 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 27 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 123 கஞ்சாகுற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 06 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில்123 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,270 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 59.016 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 147 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 571 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 29 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவழக்குகள் கண்டுபிடிப்பு மற்றும் களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட விபரம்: 

இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 142 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 80 குற்றவழக்குகளில் புலன்விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.46,86,304/- மதிப்பிலான களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளள.

தென்காசி மாவட்டத்தில் 168 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 88 குற்றவழக்குகளில் புலன்விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.49,13,720/- மதிப்பிலான களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 137 குற்றவழக்குகளில் புலன்விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.1,40,43,250/- பதிப்பிலான களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 90 குற்றவழக்குகளில் புலன்விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.70,30,738/- மதிப்பிலான களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

POCSO வழக்குகள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இக்குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கபட்டு வருகிறது.

POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை அதீத கவனத்துடன் கையாளப்பட்டு அக்குற்றங்களை இழைத்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கபட்டு வருகிறது.அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் (POCSO), வழக்குகள் நீதிமன்ற விசாரனையில் இருக்கும்போது, வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது  புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர்களின் அலைபேசிக்கு வாட்ஸ்ஆப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. 

அவ்வாறாக திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் தற்போது சுமார் 285 வழக்குகளில் இம்முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வழக்கின் போக்கினை தெரிந்துகொள்ளவும், வழக்கின் நடவடிக்கைகள் தொடர்வது குறித்த மனநிறைவு அடைவதுடன், வழக்குகளின் தண்டனை விகிதமும் அதிகரித்து இக்குற்றங்கள் குறையவும் அதிக வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி சரகம் மட்டுமல்லாமல் தென்மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களில் தற்போது சுமார் 560 வழக்குகளில் இம்முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இவ்வருட தொடக்கம் முதல் ஏப்ரல் மாத இறுதி வரை கடந்த நான்கு மாத காலத்தில் தென்மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் மட்டும் 91 POCSO வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது குறிப்பிடதக்கதாகும். அவ்வாறு தண்டனையில் முடிந்த வழக்குகளில் 11 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 31 வழக்குகளில் இருபது வருடங்களுக்கு மேலான சிறை தண்டனையும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

அவற்றிலும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 மாத காலத்தில் மட்டும் 39 POCSO வழக்குகள் தண்டனையில் முடிவுற்றுள்ளது. அவற்றில் 7 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 13 வழக்குகளில் இருபது வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

இவற்றோடு மட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணம் மற்றும் இடைக்கால நிவாரணம் ஆகியவற்றை நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் பிணை மனு தாக்கல் செய்யும்போது, பிணை விசாரணை வரும் நாளை முன்கூட்டியே பாதிக்கபட்டவருக்கோ அல்லது அவரின் பெற்றோருக்கோ அல்லது குற்ற முறையிட்டாளருக்கோ தெரியப்படுத்தியும்,

பிணை விசாரணை வரும் நாளில் அவர்களோ அல்லது அவர்கள் சார்பாக அவர்களால் நியமிக்கப்பட்ட யாரேனும் ஒருவரோ நீதிமன்றத்தில் ஆஜராகி எதிரிகளை பிணையில் விட எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தும், தன்மைக்கேற்றவாறு எழுத்துபூர்வமாக அவர்களுக்கு தெரிவித்தும், எதிரிகள் பிணையில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்குகளில் இரு நபர்கள் சம்மதத்துடன் காதலின்பால் ஏற்பட்ட (Mutually romantic retationship சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட 150 POCSO வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை மனிதாபிமான அடிப்படையில் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், 41A கு.வி.மு.ச படி சம்பன் சார்பு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தென்மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended