• முகப்பு
  • இந்தப் படம் விரைவில் வெளியாகாதா என்று ஏங்கிய தருணங்கள் உண்டு என்று குறிப்பிட்ட நடிகர் விஜய??

இந்தப் படம் விரைவில் வெளியாகாதா என்று ஏங்கிய தருணங்கள் உண்டு என்று குறிப்பிட்ட நடிகர் விஜய??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி : ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், இயக்குனர் சீனு.ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷன் சென்ட்ரில் நடைப்பெற்றது. விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி, வெளியீட்டாளரும், நடிகருமான ஆர்.கே சுரேஷ், தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா, கதாநாயகன் விஜய் சேதுபதி, கதாநாயகி நடிகை காயத்ரி, உள்ளிட்ட ஒளிப்பதிவாளர், இணை இயக்குனர்கள், துணை நடிகர்கள் மற்றும் புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ,என திரளாக கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக திரைப்படத்தின் இசை ஒளி தகடு வெளியிடப்பட்டது தொடர்ந்து விழாவில் பேசிய திரைப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி..... மாமனிதன் திரைப்படத்தை எடுத்ததோடு என்னோட வேலை முடிந்துவிட்டது, இதன்பிறகு உங்களுடைய அன்பையும் விமர்சனத்தையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதி, காயத்ரி, ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக உள்ளது என்றும், இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்றும் வாழ்த்தி ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசியது பெரும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்ட இயக்குனர் சீனு ராமசாமி... இப்படிப்பட்ட இந்த படத்தை பெற்றது யுவன்சங்கர்ராஜா அதை தத்து எடுத்தது ஆர்கே சுரேஷ் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர்.... ஆர். கே. சுரேஷ், விஜய் சேதுபதி யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இல்லாமல் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க முடியாது என்றும், கொரோனா காலத்தில் பல்வேறு தடைகளுக்குப் பின்பு சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்தப் படம் வெளியாகிறது என்று குறிப்பிட்ட சீனு ராமசாமி.... இந்த படத்திற்கு கவிஞர்கள் பா. விஜய், கருணாகரன் ஆகியோரின் பாடல்கள் தான் மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டார். மேலும் பாடலுக்கும் இசைக்கும் ஏற்றார்போல் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகப்பெரிய பிரமாண்டமாக அமைந்திருந்தது என்றும் காட்சி அமைப்புகளை வெள்ளித்திரையில் அழகாக காட்டியது இரட்டை குதிரையில் சவாரி செய்ய கூடிய திறமை கொண்ட ஒளிப்பதிவாளர் சுகுமார் தான் என்றும் அவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று கூறினார். மேலும் ஒரு தரமான படம் எடுப்பதற்கு பலரை நாம் சிரமப்படுத்த வேண்டியுள்ளது என்று உணர்வுபூர்வமாக பேசிய இயக்குனர் சீனுராமசாமி அனைவரும் இந்த படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்... *மாமனிதன் திரைப்படம் நடித்து முடித்தவுடன் விரைவில் வெளியாகாதா? என்று ஏங்கிய தருணங்கள் உண்டு* விழாவில் நடிகர் விஜய் சேதுபதி..... பேச்சு.. எனது திருமணம் முடிந்தவுடன் 2003-ஆம் வருடம் புதுச்சேரிக்கு விருந்து சாப்பிட வந்திருந்தேன் தற்போது தான் நடித்த பல படங்களில் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு இருந்தாலும் மாமனிதன் இசைவெளியீடு புதுச்சேரி நடப்பது மிகவும் பெருமைக்குரியது என்றார். ராஜா ,யுவன்சங்கர்ராஜா , சீனு.ராமசாமி இவர்கள் இல்லை என்றால் இது போன்ற ஒரு படத்தை உருவாகி இருக்காது அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி மனித உணர்வுகளை திரைப்படத்தில் பதிவு செய்ய முடியும் என்றால் அது சீனுராமசாமி போன்ற இயக்குனர்கள் தான் முடியும் என்று குறிப்பிட்டார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இந்தப் படம் விரைவில் வெளியாகாதா என்று ஏங்கிய தருணங்களும் உண்டு என்று குறிப்பிட்ட நடிகர் விஜய் சேதுபதி.. படத்தில் பணிபுரிந்த துணை நடிகர்கள், கேமராமேன் இசையமைப்பாளர், உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். இன்றைய செய்திகள் புதுச்சேரி ,இன்றைய முக்கிய செய்திகள் புதுச்சேரி,இன்றைய செய்திகள் புதுச்சேரி ,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest pondichery news tamil,Tamil news daily,cinema news,மாமனிதன் திரைப்படம்,actor,bollywood,vijay sethupathy,yuvan shankar raja

VIDEOS

RELATED NEWS

Recommended