• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தனியார் பயணிகள் பேருந்து பூக்கள் விற்பனை செய்யும் இளம் விவசாயி சென்ற பைக் மீது மோதியதில் இளம் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனியார் பயணிகள் பேருந்து பூக்கள் விற்பனை செய்யும் இளம் விவசாயி சென்ற பைக் மீது மோதியதில் இளம் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லட்சுமி காந்த்

UPDATED: May 18, 2023, 9:16:25 AM

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா சயனாபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தயாளன் என்பவரின் மகன் ஜானகிராமன் வயது 21. அல்லது தந்தையுடன் சேர்ந்து ஜானகிராமனும் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது நிலங்களில் பூக்கள் அறுவடை செய்து காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடைசத்திரம் பகுதியில் விற்பனைக்கு கொடுத்துவிட்டு, காஞ்சிபுரம் திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் படுநெல்லி அருகே வீட்டிற்கு சென்றிருக்கொண்டிருந்த போது,

எதிரே திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த பாரதி பஸ் சர்வீஸ் நிறுவனத்தின் பயணிகள் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஜானகிராமன் நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இதனை அறிந்த ஜானகிராமனின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடியும்,பேருந்தையும் அடித்து சேதப்படுத்தினர்.இது குறித்து அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் பதற்றமான சூழல் நிலவியது.

இதனையெடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் சடலத்துடன் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் ஜானகி ராமனின் உறவினர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்பட்டாமல் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனால் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டகாரர்களிடம் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

இதனையெடுத்து ஜானகி ராமனின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended