• முகப்பு
  • அரசியல்
  • செங்காடு கிராமத்தில் விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்ட தகர செட் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

செங்காடு கிராமத்தில் விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்ட தகர செட் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 14, 2023, 7:12:11 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பதில் யானை ,புலி, சிறுத்தைபுலி, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

குறிப்பாக யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் மனிதர்களை தாக்கிக் கொல்லுவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் கடம்பூர் மலை கிராம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒருவாரமாக மாலை நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் செங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் என்பவர் விவசாய தோட்ட பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்தது தகர செட் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தியது.

மாலை நேரம் என்பதால் அங்கு யாரும் தங்கவில்லை இதனால் உயிர் சேதம் ஏற்பட வில்லை. அந்த ஒற்றை நிலையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டால் மனிதர்களை நோக்கி தாக்க ஆக்ரோசமாக ஓடி வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கடந்த நான்கு நாட்களாக கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் வனத்துறையினர் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபடாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த ஒற்றை யானையை தினந்தோறும் வனத்திற்குள் விரட்டியடித்து வருகின்றனர் இது தொடர்கதையாக உள்ளது.

இதற்கு வனத்துறையினர் யானையால் மனித உயிர் சேதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended