• முகப்பு
  • district
  • மணப்பாறை அருகே இருவேறு கிராமங்களில் நடந்த மீன்பிடித் திருவிழா.

மணப்பாறை அருகே இருவேறு கிராமங்களில் நடந்த மீன்பிடித் திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் 120 ஏக்கர் பரப்பளவில் செவக்குளம் உள்ளது. மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் செவக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில் அதில் அதிள அளவில் மீன்களும் இருந்தது. இந்நிலையில் தற்போது நீர் இருப்பு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி காலை செவலூர் மற்றும் பொத்தமேட்டுப்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் வினோத்குமார்;, சார்லஸ் ஆகியோர் துண்டை வீசி தொடங்கி வைக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன் பிடி வலைகளுடனும் மீன் பிடிக்க சிலர் கொசுவலை, மூங்கில் கூடை, டேபிள் பேன் முன்பகுதியில் உள்ள கம்பி வலையை பயன்படுத்தியும் மீன்களை பிடித்தனர். கெண்டை, மீசை கெளுத்தி, கட்லா, ரோகு, ஜிலேபி என வகைவகையான மீன்கள் அனைவருக்கும் சிக்கியது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மக்களுக்கு சிக்கிய மீன்கள் எல்லாம் சுமார் 2 கிலோவிற்கு மேல் தான். 10 கிலோ வரை இருந்தது. இதனால் ஒரு மீன் சிக்கினாலும் போதும் என்று நிம்மதியாக மீன்களை மகிழ்ச்சியோடு பிடித்து சென்றனர். இதே போல் உசிலம்பட்டியில் உள்ள தவிட்டுக்குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாலும் மக்கள் ஆரவாரமாக பங்கேற்று மீன்களை பிடித்துச் சென்றனர். இரண்டு கிராமங்களிலும் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மணப்பாறை நிருபர் லட்சுமணன்.

VIDEOS

RELATED NEWS

Recommended