• முகப்பு
  • district
  • திருவண்ணாமலை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் , ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், சாலைப் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட விகிதாச்சார சாதனை மீதான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 2022 ஆம் மாதம் அரசு திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்துவதற்காக மேற்கு ஆரணி வட்டாரம், பெரணமல்லூர் வட்டாரம், தண்டராம்பட்டு வட்டாரம், கீழ்பெண்ணாத்தூர் ,செய்யாறு ஆகிய வட்டாரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய முக்கிய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய செய்திகள் திருவண்ணாமலை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,Thiruvannamalai news,Thiruvannamalai news today,Thiruvannamalai news today tamil,consultative meeting on all development projects implemented by the Rural Development and Panchayat Department was held at the Thiruvannamalai District Collectorate

VIDEOS

RELATED NEWS

Recommended