• முகப்பு
  • district
  • பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலான சிறார் திரைப்பட திருவிழா.

பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலான சிறார் திரைப்பட திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்திலேயே முதன்முறையாக பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம், சமுதாயத்திற்கு உதவும் தன்மை ஆகியவற்றை கற்பிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலான சிறார் திரைப்பட திருவிழா. 2022-23ஐ கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்த பின், 6ம் வகுப்பு முதல் 09ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை சிறார் திரைப்படம் திரையிடப்படும். அந்த படத்திற்காண விமர்சனங்கள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டு அதில் 15 சிறந்த விமர்சனங்கள் திரைப்பட வல்லுனர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அரசு சார்பில் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என பேட்டி ! கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு மேனிலைப்பள்ளியில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்புரையாற்ற, பள்ளிகல்வித்துறை அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலைமையிலும் அரசு கொறடா கோவி செழியன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர் சுதன் திட்ட விளக்கவுரையாற்ற. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழக முதல்வரின் உத்தரவுபடி, பள்ளி மாணவர்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திடவும், ஒழுக்கத்தையும், நன்னெறியையும், பெரியவர்களை மதித்து நடத்தல், சமுதாயத்திற்கு உதவுதல் போன்ற நற்பண்புகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், மாநிலத்திலேயே முதன்முதலில், சிறார் திரைப்பட திருவிழாவினை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதில் இன்று தி கிட் என்ற ஒரு மணி நேரம் திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம், மக்களவை உறுப்பினர் (மயிலாடுதுறை) செ இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம் சிவக்குமார் உட்பட ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்திடவும், அவர்களிடையே சமுதாயத்திற்கு உதவும் மனப்பான்மை, பெரியோர்களை மதிக்கும் பண்புகளை தெரிந்து கொள்ளவும், நன்னெறிகளை போதிக்கவும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாதம் ஒரு சிறார்களுக்காண திரைப்படம் திரையிடப்படும் இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பொறுப்பாசிரியர் இருப்பார், அவருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும், இந்த சிறார் திரைப்படங்கள் வாயிலாக அவர்கள் கல்வி அறிவை தாண்டி, சமுதாயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி பழக வேண்டும் என அறிந்து கொள்ள முடியும், என்ன விசயங்களை அவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதனை அவர்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்டுப்பெறப்படும் அந்த விமர்சனங்கள் ஒன்றியம், மாவட்டம் மாநிலம் என வரிசையில் கொண்டு செல்லப்பட்டு நிறைவாக, சிறந்த 15 விமர்சனங்கள் மாநில அளவில், திரைப்பட வல்லுனர்களால் தேர்வு செய்யப்படும். அப்படி சிறந்த விமர்சனங்கள் அளிக்கும் 15 மாணவ மாணவியர்கள் தமிழக அரசு சார்பில், வெளிநாட்டிற்கு சுற்றுலாவாக அழைத்து செல்லப்படுவர் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் தெரிவித்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended