லகு வஜ்ராசனத்தில் 5 வயது சிறுமி சாதனை.

மகேஷ் குமார்

UPDATED: May 14, 2023, 11:26:21 AM

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவரான, அ.தி.மு.க.,வை சேர்ந்த கே.எம்.எஸ்.சிவகுமார், மஞ்சுஷா தம்பதியரின் மகள் எம்.எஸ்.லக்ஷயா, வயது 5. இவர் கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., பாடசாலா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 

கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இரண்டு ஆண்டு காலமாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

இவர், தரையில் மண்டியிட்டு, பின் நோக்கி வளைந்து கால்களுக்கு இடையே தலையை கொண்டு செல்ல கூடிய லகு வஜ்ராசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 30 முறை செய்து புதிய உலக சாதனை படைத்தார்.

இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛நோபல் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. 

சாதனை படைத்த சிறுமி லக்ஷயா, அவரது யோகா பயிற்சியாளர் சந்தியா, தந்தை கே.எம்.எஸ்.சிவகுமார், தாயார் மஞ்சுஷா ஆகியோரை, அ.தி.மு.க., கழக பொது செயலாளரும், சட்டசபை எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended