• முகப்பு
  • crime
  • காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 22 வயதுடைய வாலிபர் தன் வீட்டு அருகேயே படுகொலை.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 22 வயதுடைய வாலிபர் தன் வீட்டு அருகேயே படுகொலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் வசிப்பவர் விஜய் (வயது 22). கட்டுமான தொழில் செய்து வருகிறார். கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் தொடர்பு கொண்ட விஜய் தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு கஞ்சா போதைக்கு அடிமையாகி வம்பு தும்புக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய அம்மா மற்றும் இரண்டு சகோதரிகளுடன் சண்டை போட்டுக் கொண்டு தன் வீட்டு அருகேயே வாடகை வீடு எடுத்து அதில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து மகனின் நடமாட்டம் இல்லாததை கண்ட விஜய்யின் தாய் மகன் வசிக்கும் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளார். வீட்டின் உள்ளே ரத்த வெள்ளத்தில் விஜய் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்று அலறினார். அவரின் கூக்குரலை கேட்டு விஜய்யின் சகோதரிகளும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் திரண்டு வந்தனர். அப்பகுதி மக்கள் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விஜய்யின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விஜய்யின் சகோதரிகளிடமும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் தீவிர விசாரணையை செய்து வருகின்றார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். கஞ்சா போதைக்கு அடிமையாகி அவ்வப்போது சண்டை, சச்சிரவு, அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு வந்த விஜய்யை முன் விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா அல்லது எட்டு மாத காலமாக சகோதரிகளுடன் சண்டையிட்டு பேசாமல் இருந்தது காரணமா அல்லது கஞ்சா வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் போன்ற வகையில் பிரச்சனை ஏற்பட்டு அதனால் கொலை நடந்திருக்கலாமா என பல்வேறு கோணத்தில்‌ காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக கொலை ,கொள்ளை, வழிப்பறி , வெட்டுக்குத்து போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் கஞ்சாவின் விற்பனை மாவட்டத்தில் கொடிக்கட்டி பறக்கின்றது. ஸ்பெஷல் பிரான்ச் எனப்படும் தனிப் பிரிவு காவல்துறையினர் சிலர் இந்தப் பகுதியில் நடக்க உள்ள குற்ற விசயங்களை முன்கூட்டியே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வசம் எடுத்து செல்லப்படுவதில்லை எனவும் ஒரு சிலர் சமூக விரோத கும்பலுடன் சேர்ந்து கொண்டு அவர்களிடம் இருந்து எதையோ பெற்றுக் கொண்டு அவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகின்றார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் பகிங்கரமாக குற்றம் சாட்டுகின்றன. நேற்று மாலை கூட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக ஸ்தலமான காந்தி ரோடு அருகே உள்ள மடம் தெரு பகுதியில் , மறைந்த தாதா ஸ்ரீதரின் உறவினரான தியாகு , வடிவேலு, குமரேசன் , மற்றும் குள்ள ஸ்ரீதர் ஆகிய நான்கு பேர்கள் பட்டா கத்தியை தூக்கிக்கொண்டு விரட்டி விரட்டி ஓடி சென்று கத்தி செல்வா என்ற விஜய்யை வெட்டிவிட்டு தலைமறைவானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended