• முகப்பு
  • world
  • துருக்கி பூகம்பத்தில் சிக்கிய 2 மாத குழந்தை 128 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்பு.

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய 2 மாத குழந்தை 128 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 1:06:33 PM

துருக்கியில் கடந்த திங்கள்கிழமை 7.8 ரிச்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பல்வேறு நகரங்களில் 6,000 மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமாயின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடுமையான உறைபனி சூழலுக்கிடையிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தங்களது பணிகளை அயராது மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு ஊக்கமளிக்கும் வகையில், பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தை 128 மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து மீட்கப் பட்டுள்ளது . ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினரின் சோர்வடையாத பணியால் கடந்த ஐந்து நாட்களில் ஆறு மாத கர்ப்பிணி, 70 வயது பெண், குழந்தைகள் எனஏராளமானோர் மீட்கப்பட்டுள்ள தாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பம் இந்த நூற்றாண்டில் உலக அளவில் ஏற்பட்ட 7ஆவது மிக மோசமான பேரழிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2003ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 31,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து துருக்கியில் பல்வேறு நாடுகள் சர்வதேச உதவிகளை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended