• முகப்பு
  • district
  • உ.புதூர் சிக்சர் டீம் நடத்தும் 8ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா.!!

உ.புதூர் சிக்சர் டீம் நடத்தும் 8ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உ.புதூர் இளைஞர்கள் 8ம் ஆண்டு கிரிக்கெட் திருவிழாவினை நடத்தினர். உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் ஜேபி.நகர் மைதானத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள 24அணியைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 4அணிகள் வெற்றி பெற்றுள்ளனர்.முதல் பரிசை ரூபாய் 6666 கம்பம் PMJ அணி வெற்றி பெற்றுள்ளனர், இரண்டாவது பரிசு ரூபாய் 4444 உத்தமபாளையம் சிக்சர் டீம், மூன்றாவது பரிசு ரூபாய் 2222 ராயப்பன் பட்டி இந்தியன் ஸ்டார் டீம் , நான்காவது பரிசு ரூபாய் 1111 கம்பம் KJP அணி வென்றது. முதல் பரிசு உத்தமபாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் , SMS காசிம் அவர்களும், இரண்டாவது பரிசு உ.புதூர் தொண்டரணி து.அமைப்பாளர் KS முகமது ரஜப், மூன்றாவது பரிசு தீயணைப்பு துறை திரு.பொன். மணிகண்டன் வழங்கினார். நான்காவது பரிசு திமுக 1வது வார்டு செயளாலர், பாலுச்சாமி வழங்கினார். இந்நிலையில் திமுக பிரமுகர் அப்துல் நசிர்கான் அவர்களும் மனித நேய மக்கள் கட்சி உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் முபாரக், செயளாலர் திரு , உதயகுமார் மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். வீரர்கள் அனைவரையும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

VIDEOS

RELATED NEWS

Recommended