- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பாதிரிவேடு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி.
பாதிரிவேடு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி.
மகேஷ் குமார்
UPDATED: May 16, 2023, 8:53:44 AM
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சியில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாதிரிவேடு அரசு மேல்நிலைப் செயல்பட்டு வருகிறது.
இங்கு மாதர் பாக்கம், பாதிரிவேடு, போந்தவாக்கம், செதில்பாக்கம் பல்லவாடா, நேமலூர், பண்ணுர், ஈகுவார்பாளையம், சித்தூர் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் தொடர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிகளுக்கு தேவையான நிதி உதவி செய்யும் வகையில் பணியை 3 ஆண்டுகளாக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து நேற்று மேற்கண்ட பள்ளியில் 1994-95 ஆம் ஆண்டு 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 100.க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பள்ளி வளாகத்தில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு அப்போதிருந்த தலைமையாசிரியர், கணித ஆசிரியர், தமிழ் வாத்தியார் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவின் ஆசிரியர் பெருமக்களை வரவேற்று கௌரவப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு ஆசை பெருமக்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் அந்தப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளும் வர்ணம் பூசுவதும், குழாய் இணைப்பு ஆகிய 5லட்சம் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொண்டனர்.