• முகப்பு
  • கல்வி
  • நாகை அருகே கீழ்வேளூரில் 4 தலைமுறை ஆசிரியர்கள் மாணவர்களோடு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நடைப்பெற்ற பொறுப்பு தலைமையாசிரியர் பணி நிறைவு விழா.

நாகை அருகே கீழ்வேளூரில் 4 தலைமுறை ஆசிரியர்கள் மாணவர்களோடு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நடைப்பெற்ற பொறுப்பு தலைமையாசிரியர் பணி நிறைவு விழா.

செ.சீனிவாசன்

UPDATED: May 8, 2023, 8:02:10 PM

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

அப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன். 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரியர் பணியாற்றிய இவர் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றி இந்த கல்வி ஆண்டோடு பணி நிறைவுப் பெறுகிறார்.

அவரிடம் 1998 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு மற்றும் விருது வழங்கும் நடைப்பெற்றது.

கீழ்வேளூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலும் அரசு பணிகளிலும் பணியாற்றுகின்றனர்.

அவர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினர். அதில் முருகேசன் ஆசிரியருக்கு 1974ல் கணிதபாடம் எடுத்த ஆசிரியர் கணபதி அவர்களையும் அழைத்து கெளரவித்தனர்.

இப்படியாக பாடம் நடத்திய ஆசிரியர்கள் அவர்களிடம் பயின்ற மாணவர்கள் என 4 தலைமுறை ஆசிரியர் மாணவர்கள் பங்கேற்று தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்குவது போல, ஞானச்சுடர் நல்லாசிரியர் முருகேசன் என்ற விருது வழங்கினர்.

தொடர்ந்து மாணவர்கள் 35 கிராம் எடையுள்ள சுயவெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு பதிரம் சீர்வரிசையோடு ஆசிரியர் விரும்பி அணியும் சபாரிசூட் மலர்மாலை மலர்கீரிடம் என நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவங்களையும், உறவுகளையும் மகிழ்ச்சியும் , நெகிழ்ச்சியாகவும் பகிர்ந்துக் கொண்டனர், வருகை தந்த அனைவருக்கும் வாழ்வில் சிந்தனைகளை உள்ளடக்கிய ஏணிப்படிகள் என்ற நூல் வழங்கப்பட்டது.

நாகை அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒன்றிணைந்து ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்திய நிகழ்வு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended