• முகப்பு
  • district
  • 3 pm பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த செய்திகள் ?

3 pm பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த செய்திகள் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சேலம் : கொங்கணாபுரம் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தனுக்கு அரிவாளால் வெட்டு ஏற்பட்டது. நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இராமநாதபுரம் : மீன்பிடி தடைக்காலமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகளை பராமரிப்பு பணிகளில் இராமேஸ்ரம், பாம்பன் பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை : ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அறையில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் ஈடுபட்டனர். நரம்பியல் வார்டில் நோயாளிகளை மீட்கச் சென்ற 5 மருத்துவர்களுக்கும் மூச்சுத் திணறல். மூச்சு திணறல் காரணமாக 5 மருத்துவர்களும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி : பெட்டவாய்த்தலையில் பஞ்சவர்ணம் என்பவர் வீட்டில் இருந்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பஞ்சவர்ணம் சென்னை சென்ற நிலையில் ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. சென்னை : புதுவண்ணாரப்பேட்டையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பி.ஏ. முதலாமாண்டு மாணவிகள் 10 பேரை 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் நேற்று மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி : மத்திய பாகம் காவல்நிலையத்தில் "மாற்றத்தை தேடி" என்ற மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் விவிடி சிக்னல் முதல் பழைய துறைமுகம் வரை 60 சிசிடிவி கேமரா திறப்பு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் திறந்துவைத்தார். தூத்துக்குடி : திருவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் திருகோவில் செல்லும் வழியில் காலி மதுபாட்டில்கள் கிடப்பதால் பக்தர்கள் முகம் சுளிப்பு திருப்பூர் : இயற்கையான முறையில், சாயமேற்றப்பட்ட ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் வகையில், திருப்பூர் அடல் இன்குபேஷன் மையம், இயற்கை சாயப்பொடி தயாரிக்கும் தொழில்நுட்பங்களை நிறுவியுள்ளது திண்டுக்கல் : பழனி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் காவலர்கள் பல குழுக்களாக மாறுவேடத்தில் பல்வேறு பெட்டி கடைகளுக்கு சென்று குட்கா, பான்மசாலா, பான்பராக், உள்ளிட்ட பொருட்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,salem news,tuticorin news,dindigul news,Thirupur news

VIDEOS

RELATED NEWS

Recommended