• முகப்பு
  • குற்றம்
  • வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 25 கிலோ கஞ்சா

வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 25 கிலோ கஞ்சா

செ.சீனிவாசன்

UPDATED: May 13, 2023, 6:52:30 PM

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விழுந்தமாவடி கடற்கரை பகுதியில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இன்று அதிகாலை கடற்கரை பகுதிக்கு கார் ஒன்று வருவதை அறிந்த உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் காரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது காரில் 15 பொட்டலங்களில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் விழுந்தமாவடியை சேர்ந்த கோடி என்கிற கோடீஸ்வரன், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் சேர்ந்த சிவக்குமார் என்பதும் படகுமூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கோடீஸ்வரன் மற்றும் சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended