• முகப்பு
  • போரூரில் 15 கிலோ போதைப்பொருள் பதுக்கிவைப்பு.

போரூரில் 15 கிலோ போதைப்பொருள் பதுக்கிவைப்பு.

S.முருகன்

UPDATED: Jan 24, 2024, 1:14:19 PM

சென்னை போரூர் மதனந்தபுரம் குன்றத்தூர் சாலையில் தனியார் கம்பெனிகள், குடோன்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அப்பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாவா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உளவுத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து தகவல் அறிந்த ஆவடி காவல் ஆணையராக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நேற்று சம்பவ இடத்தில் இடத்திற்கு சென்று திடீரென்று சோதனை செய்தனர்.

அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவற்றை மகாராஷ்டிராவில் இருந்து கடத்தி வந்து சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து ரூபாய் 100 முதல் 500 வரை போரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த போதைப் பொருட்களை பாதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் (42), ராமரத்தன்(35), சபில் குருதாஸ்(25) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அறிந்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended