• முகப்பு
  • crime
  • இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 14 செல்போன்கள் திருடப்பட்ட சிசிடிவி காட்சி !

இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 14 செல்போன்கள் திருடப்பட்ட சிசிடிவி காட்சி !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டை தண்டலம் சுங்குவார்சத்திரம் வாரணவாசி ஓரகடம் படப்பை மணிமங்கலம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இயங்கி வருகின்றது பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஒரகடம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக கொலை, கொள்ளை, திருடு ,வழிப்பறி ,கூட்டுக் கொள்ளை போன்ற விஷயங்கள் அதிகரித்து வருகின்றது . மேலும் செல்போன்கள் திருட்டும், வழிப்பறியும் தினந்தோறும் நடைபெறுகின்றன. ஒரகடம் அடுத்த காரணித்தாங்கள் ஊராட்சியில் வாடகைக்கு அறை எடுத்து சுந்தரம் ஆட்டோ மோட்டார்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மணி, மணிகண்டன், பிரதீப் ,ஆகாஷ் ஆகிய 15 க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் ரூமுக்கு சென்ற ஒரு மர்ம நபர் அங்கிருந்த 14 செல்போன்களை திருடி கொண்டு வெளியேறுகிறார். இதுதொடர்பாக செல்போன்களை தொலைத்தவர்கள் ஒரகடம் காவல் நிலையத்தில் 26 ஆம் தேதி அன்று புகார் கொடுத்தும் இதுநாள்வரையில் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என செல்போனில் தொலைத்தவர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த மர்மநபர் செல்போனை திருடி கொண்டு வெளியேறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது. 9 மற்றும் 10ஆம் தேதி அன்று காவல்துறையின் மானியக்கோரிக்கை வர உள்ள நிலையில் திருட்டு வழிப்பறி போன்ற எந்த குற்ற செயல்கள் நடந்தாலும் அதற்கு FIR போடக்கூடாது என மேலிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக எந்த காவல்நிலையத்திலும் FIR பதிவு செய்யப்படுவதில்லை என ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி தெரிவித்தார். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended