• முகப்பு
  • திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் 1 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட??

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் 1 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக அரசானது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி அதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்,  வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் சுயமாக தொழில் செய்து தங்களது சொந்த காலில் நிற்பதற்கு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு ஏதுவாக ஏழைப்பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற பெண் ஆகியோர்கள் மற்றும் சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேறும் வகையில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்படுகிறது. அதன்படி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ. 41 இலட்சத்து 200 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 9 பயனாளிகளுக்கு ரூ. 8 இலட்சத்து 97 ஆயிரத்து 993 மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 3 பயனாளிகளுக்கு ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைககள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 493 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 23 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான வைப்புத்தொகை ரசீதுகளும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 840 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுகொண்டார். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்

VIDEOS

RELATED NEWS

Recommended