இன்றைய (06-08-2022) ராசி பலன்கள்குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்மேஷம்
ஆகஸ்ட் 06, 2022


இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். முக்கியமான முடிவு எடுப்பதை தவிர்க்கவும். விலகி சென்றவர்களை பற்றி சிந்தித்து வருந்துவீர்கள். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கடிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அஸ்வினி : பதற்றம் நீங்கும்.

பரணி : பொறுமையுடன் செயல்படவும்.

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
-----------------------------------ரிஷபம்
ஆகஸ்ட் 06, 2022


பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
------------------------------------


மிதுனம்
ஆகஸ்ட் 06, 2022


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும். 

திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும். 

புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.
----------------------------------


கடகம்
ஆகஸ்ட் 06, 2022


எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவுபெறும். வியாபார பணிகளில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றத்தினை உருவாக்குவீர்கள். குலதெய்வ வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : நெருக்கடிகள் ஏற்படும். 

பூசம் : முன்னேற்றமான நாள்.

ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
----------------------------------சிம்மம்
ஆகஸ்ட் 06, 2022


குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : அலைச்சல்கள் ஏற்படும்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : அனுகூலம் ஏற்படும்.
------------------------------------


கன்னி
ஆகஸ்ட் 06, 2022


உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மாற்றம் உண்டாகும். 

அஸ்தம் : வாய்ப்புகள் அமையும். 

சித்திரை : முடிவு கிடைக்கும்.
----------------------------------துலாம்
ஆகஸ்ட் 06, 2022


கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. பொன், பொருள் சேர்க்கையின் மீது ஆர்வம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.

சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.

விசாகம் : ஆர்வம் உண்டாகும். 
------------------------------------


விருச்சிகம்
ஆகஸ்ட் 06, 2022


உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

விசாகம் : தெளிவு பிறக்கும். 

அனுஷம் : முயற்சிகள் கைகூடும். 

கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
----------------------------------தனுசு
ஆகஸ்ட் 06, 2022


புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சொத்துக்கள் விற்பதில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

பூராடம் : அனுபவம் உண்டாகும். 

உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
-----------------------------------மகரம்
ஆகஸ்ட் 06, 2022


குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் மேன்மையான சூழல் அமையும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி ஏற்படும்.

திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.

அவிட்டம் : மேன்மையான நாள்.
-----------------------------------


கும்பம்
ஆகஸ்ட் 06, 2022


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

சதயம் : மதிப்பு அதிகரிக்கும்.

பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
-----------------------------------


மீனம்
ஆகஸ்ட் 06, 2022


செய்கின்ற முயற்சிகளில் நிதானம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : நிதானம் வேண்டும். 

உத்திரட்டாதி : மந்தமான நாள்.

ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம்

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அந்த 7 நாட்கள் நகைச்சுவை காட்சி | Antha 7 Naatkal Full Comedy | Comedy Scenes #comedyscenes #bakyaraj #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

விவேக்கின் சூப்பர்ஹிட் நகைச்சுவை காட்சி | Vivek's Super Hit Comedy Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மணல் கயிறு நகைச்சுவை திரைப்படம் | Manal kayiru Full Comedy Film | #svesekar #visu #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்