இலங்கை நுவரெலியா சீதை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 8, 2024, 6:40:08 AM

நுவரெலியா சீதை அம்மன் கோயில்

வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா சீத்தா அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இம்மாதம் 19ம் திகதி நடைபெறுகின்றது.

இது தொடர்பில் ஆலயத்தின் தர்மகத்தாவும் ,பாராளுமன்ற உறுப்பினருமானடDr.வீ.ராதாகிருஷ்ணன் நேற்று (07)கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கும் போது :

இலங்கை அசோகவனம் நுவரெலியா சீதை அம்மன் கோவில்

கும்பாபிஷேகத்துக்கு இந்தியாவில் இருந்து ரவிசங்கர் குருஜி வரவிருப்பதோடு அயோத்தியிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு 17ம் திகதி அன்று கொழும்பு மயூராபதி ஆலயத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட பூசைகள் இடம்பெறும் இதனை அடுத்து தீர்த்த ஊர்வலம் கொழும்பில் முக்கிய நகரங்களை கடந்து கடுவலை ,அவிசாவலை ,யட்டியாந்தோட்டை ,கினிகத்தேனை ,ஹட்டன் ,கொட்டகலை ,தலவாக்கலை ,பூண்டுலோயா ,இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தை சென்றடையும்.

மறுநாள் நுவரெலியா ஊடக சீத்தா அம்மன் ஆலயத்தை சென்றடையும் மேலும்19ம் திகதி இடம்பெறும் மஹாகும்பாபிஷேகத்தில் இந்தியாவிலிருந்த அதிகமான பக்கத அடியார்கள் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்தபாராளுமன்ற உறுப்பினர்  இது நாட்டின் சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

VIDEOS

Recommended