தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுகள் அந்தந்த மாவட்டத்திற்கு பிரித்த அனுப்பப்படும்.
JK
UPDATED: Apr 30, 2024, 3:26:30 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது
இந்நிலையில் தேர்தல் பணியில் உள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களது வாங்குகளை பணிபுரிந்து பகுதியில் உள்ள மையத்தில் கடந்த 17 , 18 ஆகிய தேதிகளில் அஞ்சல் மூலமாக பதிவு செய்தனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் ஆகியவை இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு மையத்திலிருந்து தமிழ்நாடு மாவட்டம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு பிரித்து வழங்கும் பணி அதிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் உரிய காவல்துறை பாதுகாப்புடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.