• முகப்பு
  • விளையாட்டு
  • இலங்கையில் வாழும் இந்திய சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 1St Inter -Indian Association Cricket Tournament)

இலங்கையில் வாழும் இந்திய சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 1St Inter -Indian Association Cricket Tournament)

Irshad Rahumathulla

UPDATED: May 5, 2024, 3:34:10 PM

இலங்கையில் வாழும் இந்திய சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட அணிக்கு 6 பேர்கள் கொண்ட 5 ஒவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டியும் ( 1St Inter -Indian Association Cricket Tournament),1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு உலக கிண்ணத்தை சுவீகரிக்க காரணமாக இருந்த அர்ஜூன ரணதுங்க தலைமையிலான அணியினரிக் சினேகபூர்வ போட்டிகள் இன்று கொழும்பு கோல்ப் மைதானத்தில் இடம் பெற்றது.

original/img-20240505-wa0124
இலங்கையில் வசிக்கும் இந்திய சமூகத்தின் பிரதி நிதிகள் இந்த போட்டிகளில் 6 அணிகளாக கலந்து கொண்டனர்.

இசைக்கு எல்லைகள் இல்லை அதனை யாரும் நுகரலாம் என்ற மொழிக் கொப்ப விளையாட்டிலும் திறமைகளே முன்னிற்கும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த போட்டியினை இந்திய கலாச்சார் அமைப்பு (இந்திய கலாச்சார் அமைப்பு (ICA) ஏற்பாடு செய்திருந்தமை இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியினை தோற்றுவித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

original/img-20240505-wa0127
கிரிக்கட் உலகலாவிய போட்டியாக பேசப்படுவதும்,விளையாடப்படும்,சமூகத்தில்ஏற்றத்தாழ்வுகள்,பிரிவுகள்,இ ன,மதங்கள் மற்றும் மொழி என்பனவற்றை கடந்து அனைவரா லும் நேசிக்கப்படும் ஒரு நிகழ்வு என்பதை இந்த போட்டிகளின் போது நுகர முடிந்தது.

இந்திய நாட்டை பொறுத்தவரையில் கிரிக்கட் மக்களுடைய வாழ்க்கையில் பிணைக்கபட்டதொன்று இன்றைய இந்த போட்டிகளின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சன்தோஷ்.ஜா  (Mr.Santhosh Jha) இந்த செய்தியினை வெளியிட்டதுடன்,போட்டிகளின் வெற்றிக்கு தோல்விக்கும் இடையில் காணப்படும் உறவு என்பது மிகவும் போற்றத்தகது என்று கூறினார்.

original/img-20240505-wa0125
2023 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கான புதிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட போதிலும்,2007 முதல் 2010 வரையான காலப்பகுதியில் இலங்கை – இந்திய பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக பணியாற்றியமை இன்றைய இந்த கிரிக்கட் போட்டியின் முக்கிய நிகழ்வாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இயக்கவியல்,தொலை நோக்கு கொண்ட,தொழில் முனைவோர் ஊக்குவிப்பாளரான முன்னாள் தலைவரும்,தற்போதைய இந்திய கலாச்சார பேரவையின் தலைவருமான அன்ரிபன் பணர்ஜீயின் (Cap.Anirban Banerjee) நெறிப்படுத்தலில் முழு நாள் விளையாட்டு போடியாக இது இடம் பெற்றமை இலங்கையில் வாழும் இந்திய சமூகத்திற்கு கிடைத்ததொரு அங்கீகாரமாக இதனை நோக்குகின்றனர்.

இன்றைய போட்டி நிகழ்வுகளின் வெற்றிக்கு அனுசரணையாளர்களின் பங்களிப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்காக வெற்றி கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பனவற்றை வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தது.

குறிப்பாக

 LANKA IOC,HANGALA,S&T,SHAPOOJI PALLONJI,KINGS HOSPITAL.SRN,SERENDIB FASCIA,ASIAN PAINTS,LIC,LORDS GARMENTS,COKE AND MELWA, குறிப்பிடக் கூடிய பங்களிப்பினை வழங்கியதற்கு இதன் போது பாராட்டு தெரிவிக்கப்ட்டது.

original/img-20240505-wa0126
இன்றைய போட்டிகளின் இறுதிப் போட்டியில் வெற்றிக் கொண்ட அணியுடன் அர்ஜூன ரணதுங்க,அரவின்த டி சில்வா,நுவான் சொய்சா, உள்ளிட்ட இலங்கையின் நட்சத்திரங்கள் விளையாடியதுடன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து இலங்கையின் கிரிக்கட் பெயரினை பதிவு செய்தமையை அனைவரும் இதன் போது பாராட்டினர்.

இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளின் ஊடக இணைப்பு பணியினை இந்திய கலாச்சார அமைப்பின் பிரதம ஊடக தலைவரான எல்விஸ் பீட்டர்(Elvis Peter -Head of Media -ICA) மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended