• முகப்பு
  • இலங்கை
  • பண்டாரவளை நேர அட்டவணை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவு

பண்டாரவளை நேர அட்டவணை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவு

ராமு தனராஜா

UPDATED: May 8, 2024, 6:51:11 AM

Today Sri Lanka Tamil News

பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நேற்று (07) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி மற்றும் நடத்துனர் தனியார் பஸ் சாரதிகளுக்கும் நடத்துனர்க்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் 4 வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 நேர அட்டவணை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

Sri Lanka News in Tamil 

 பண்டாரவளை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended