• முகப்பு
  • இந்தியா
  • கனடாவில் நடப்பது (சீக்கிய) மைனாரிட்டி வாக்கு வங்கி அரசியல் - ஜெய்ஷங்கர்

கனடாவில் நடப்பது (சீக்கிய) மைனாரிட்டி வாக்கு வங்கி அரசியல் - ஜெய்ஷங்கர்

Admin

UPDATED: May 5, 2024, 10:49:15 AM

"காலிஸ்தானிகள் கனடாவை தங்கள் தவறான தேவைக்கு உபயோகித்துக் கொள்கிறார்கள், பதிலுக்கு கனடா அரசியல்வாதிகளும் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கு அந்த காலிஸ்தானிகளை உபயோகிக்கிறார்கள்!"

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜர் கனடாவில் போட்டுத் தள்ளப்பட்ட விவகாரத்தில் நேற்று மூன்று சீக்கியர்களை கனடா போலீஸ் கைது செய்தது பற்றி டாக்டர் ஜெய்ஷங்கர் :

"கனடாவில் நடப்பது (சீக்கிய) மைனாரிட்டி வாக்கு வங்கி அரசியல். அதை உபயோகித்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். நிஜ்ஜர் பாரதத்தால் தேடப்பட்ட குற்றவாளி. அதை கனடாவிடம் தெரிவித்தும் அவர்கள் நிஜ்ஜரை பாரதத்திடம் ஒப்படைக்கவில்லை.

உலக அளவில் பாரதத்தின் மதிப்பும் பாரத பிரதமரின் மதிப்பும் உயர்ந்துள்ளது - கனடாவைத் தவிர. நிஜ்ஜர் கொலைக்கு கனடா எந்த ஆதாரத்தையும் நம்மிடம் தரவில்லை. (சீக்கிய மைனாரிட்டி வாக்கு வங்கி) அரசியல் நிர்பந்தங்களுக்காக பாரதத்தை குறை கூறுகிறார்கள் (கனடா பிரதமர்).

அங்கு தேர்தல் வரவிருப்பதால், வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள். அங்கே ஆளும் டுருடோ கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், காலிஸ்தான் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 25 காலிஸ்தானிகளை திருப்பி அனுப்பச் சொல்லியும் அவர்கள் இசையவில்லை".

 

  • 5

VIDEOS

Recommended