2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனு ...
Admin
UPDATED: May 2, 2024, 10:42:17 AM
2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
- 2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோருவதாகக் கூறி உச்சநீதிமன்ற பதிவாளர் மனுவை நிராகரித்தார்.
- இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார்.
- அலைக்கற்றைகளை ஏலத்திற்கு பதிலாக நிர்வாக உத்தரவு மூலம் ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுவில் கோரியிருந்தது.
- கடந்த 2012-ம் ஆண்டில் 2G வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
- தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய Airtel நிறுவனத்திற்கு அலைக்கற்றைகளை மத்திய அரசு நேரடியாக விற்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.