தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி  மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை அமல் படுத்திய மீன்வளத்துறை.

கார்மேகம்

UPDATED: Jan 11, 2024, 1:12:53 PM

இராமநாதபுரம் ராமேஸ்வரம் மீனவர்கள் தி கிரேட் இந்தியா நியூஸ் வாயிலாக தடை செய்யப் பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி சில விசைப் படகுகள் மீன்  பிடிப்பதாக தி கிரேட் இந்தியா நியூஸில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து

https://thegreatindianews.com/news/marine-workers-union-requests-strict-implementation-of-the-fisheries-regulatory-act

இராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்து வந்த பல விசைப் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை  செய்தனர்.

அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை  பயன்படுத்தி மீன்பிடிக்க சென்று வந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக 22 விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு நிருத்தி  வைக்கப்பட்டுள்ளதுடன் 

மேல் நடவடிக்கைகளுக்கு மீன்வளத்துறை துணை இயக்குனர்க்கும் பரிந்துறைக்கப் பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மீனவர்கள்  தெரிவிக்கையில் தி கிரேட் இந்தியா  நியூஸ் இதழுக்கு தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை செய்தி வெளியிட கோரிக்கை விடுத்திருந்தோம்,

அந்த செய்தி வெளியானதை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் சில விசைப் படகுகளுக்கு அனுமதி சீட்டு நிருத்தம்  செய்து நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

  • 19

VIDEOS

RELATED NEWS

Recommended