• முகப்பு
  • தி கிரேட் இந்தியா நியூஸ் எதிரொலி
  • தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி  தீபாவளி முடிந்தும் நகராட்சியின் அலட்சியத்தால் குப்பைகள் அகற்றாமல் குப்பை கிடங்காக காட்சியளிக்கும் பரமக்குடி சின்னக்கடை பகுதியில் குப்பைகளை அகற்றினர்.

தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி  தீபாவளி முடிந்தும் நகராட்சியின் அலட்சியத்தால் குப்பைகள் அகற்றாமல் குப்பை கிடங்காக காட்சியளிக்கும் பரமக்குடி சின்னக்கடை பகுதியில் குப்பைகளை அகற்றினர்.

மாமுஜெயக்குமார்

UPDATED: Nov 15, 2023, 1:58:56 PM

தீபாவளி திருநாளை கடந்த 12-ந் தேதி ஞாயிறன்று தமிழகம் மட்டுமல்லாது உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகவும் சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் சின்னக்கடை பகுதி உள்பட நகர் முழுவதும் பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தீபாவளி திருநாள் முடிந்து 2 நாட்கள் கடந்தும் சின்னக்கடை பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து குப்பை கிடங்கு போன்று காட்சியளிக்கிறது.

இதனால், துர்நாற்றம் வீசியும், கொசுக்கள் நிறைந்தும் காய்ச்சல், டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் சீறிப் பாய்ந்து கூறியதாவது :

தீபாவளியை கொண்டாடி இருநாட்கள் ஆகியும் குப்பைகள் அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால் குப்பை கிடங்கு போன்று காட்சியளிப்பதுடன் குழந்தைகள், வயதானவர்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நலனை பேணி பாதுகாக்க தமிழக அரசும், மருத்துவ துறையும் அன்றாடம் புதுப்புது வழிகாட்டுதலின் பேரில் திறம்பட செயல்பட்டு வந்தாலும்,

இங்குள்ளவர்கள் போன்றவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவது சாத்தியமாகும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லையென சீறிப்பாய்ந்து கூறினர்.

இது சம்மந்தமான செய்தியும், படமும் தி கிரேட் இந்தியா செய்தி 14-ந் தேதி வெளியானவுடன் https://thegreatindianews.com/news/paramakudi-chinnakkady-area-which-is-seen-as-a-garbage-warehouse-without-removing-debris-due-to-the-negligence-of-the-municipality-after-diwali

பரமக்குடி நகராட்சி துப்புறவுத் தொழிலாளர்கள் சின்னக்கடை பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் நகராட்சி நிர்வாகத்தையும், அதனுடைய அலட்சியத்தை சுட்டிகாட்டிய தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலியால், துப்புறவு பணி துரிதமாக நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் மட்டுமல்ல நகர் மக்கள் அனைவரும் தி கிரேட் இந்தியா செய்தி நிறுவனத்தை மகிழ்ந்து பாராட்டிய வண்ணமாய் உள்ளனர்.

  • 18

VIDEOS

Recommended