தி கிரேட் இந்திய நியூஸ் செய்தி எதிரொலி குவைத்தில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை  செய்ய நடவடிக்கை.

கார்மேகம்

UPDATED: May 22, 2024, 6:16:58 AM

குவைத்தில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தி கிரேட் இந்தியா நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சார்பில் தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா கடிதம் எழுதியிருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது  குவைத்தில் கைதான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குவைத் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளை  பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு 9/02/ 2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் அவர்களின் பராம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான தீர்க்கமான நடவடிக்கை  எடுக்குமாறு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி  வந்த போதிலும்

இது வரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால் அவர்களை  விடுதலை செய்திட உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு  அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா மத்திய அரசின் வெளியுறவு துறை செயலாளருக்கு மீண்டும் நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended