- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த கடல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை.
மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த கடல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை.
கார்மேகம்
UPDATED: Jan 3, 2024, 9:59:00 AM
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகுகள் வழக்கம் போல் இரட்டை மடியை பயன்படுத்தி மீன் பிடிப்புக்கு செல்வதற்கான ஒத்திகை முடிந்து எதிர் வரும் 06/01/2024 ந் தேதி முதல் அனைத்து
விசைப் படகுகளும் இரட்டை மடியை பயன் படுத்தி மீன் பிடிப்புக்கு
செல்ல தயாராகி விட்டன.
இந்நிலையில் மீன்வளத்துறையில் நேர்மையை அடகு வைத்த சில நல்ல அதிகாரிகளின் துனையுடன் சுருக்கு மடி
மீன் பிடிப்பினால் மீன் வளம்
அழியும் நிலையில் இரட்டை மடியையும் பயன்படுத்தி விசை படகுகளில் மீன் பிடிக்க செல்ல இருப்பதால் மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளன.
அதனால் இனி வரும் நான்கு மாதங்களுக்கு மீன் பிடி ஒழுங்கு முறை
சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும்.
கடல் வளம் மற்றும் மீன்வளம் அழிந்தாலும் சரி இலங்கை கடற்படை நம்
மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தாலும் சரி இலங்கை கடற்படை நம்
மீனவர்களை சிறைவைத்தாலும் சரி
எதைப் பற்றியும் கவலைப்படாத சட்டவிரோத மீன் பிடிப்பின் மூலம் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்ற ஒரு தலைமையும் அவர்களுக்கு ஆதரவான நடைமுறையை கடைப்பிடிக்கும் மீன்வளத்துறையின் ஒரு சில அதிகாரிகளால் மீன் வளம் அடிமட்ட அழிவை நோக்கி செல்லும்
எனவே மீன் வளத்துறை அதிகாரிகள்
மீன் பிடி ஒழுங்கு முறை சட்டத்தை பயன்படுத்தி இரட்டை மடி, சுருக்கு மடி
வலையை பயன்படுத்தும் விசைப்படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடல்
தொழிலாளர் சங்கம்
கோரிக்கை விடுக்கின்றனர்.