• முகப்பு
  • சென்னை
  • கார்ப்பரேட் நிறுவனங்களை சீண்டி பார்க்காத அரசு ஏழை எளிய மக்களை மட்டும் அச்சுறுத்துகிறது - திருமாவளவன்.

கார்ப்பரேட் நிறுவனங்களை சீண்டி பார்க்காத அரசு ஏழை எளிய மக்களை மட்டும் அச்சுறுத்துகிறது - திருமாவளவன்.

சுந்தர்

UPDATED: May 6, 2024, 6:46:25 PM

திருவேற்காடு பெருமாள் கோவில் தெரு பகுதியில் கூவம் ஆற்றங்கரையை ஒட்டி 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது 

இந்த குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினர் வீடுகளை அளவீடு செய்யும் பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர்

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம் வீடுகள் அகற்றப்படுவது குறித்து கேட்டறிந்தார் இதையடுத்து அங்கிருந்த பெண்கள் கண்ணீர் மல்க அவரிடம் வீடுகளை இடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் :

இங்கு வசிக்கக்கூடிய மக்கள் ஒவ்வொரு நாளும் பீதியிலும், நிம்மதியற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். அதிகாரிகள் இந்த குடியிருப்புகளை அகற்ற போகிறார்கள் என அறிவிப்பு வருவதும் மக்கள் பீதிக்கு உள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கூவம் ஆற்றங்கரையில் 30 அடி உயரத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளது. சில வீடுகள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது அதனை அகற்ற மக்கள் முன் வந்துள்ளனர்.

கரைக்கு மேல் அமைந்துள்ள 300 வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் வெள்ளத்தால் இவர்கள் ஒரு போதும் பாதிக்கப்படவில்லை,

பல இடங்களில் ஆற்றின் குறுக்கே பல கார்பரேட் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் கட்டிடம் கட்டியுள்ளது அவற்றையெல்லாம் சீண்டி பார்க்காத ஆட்சி நிர்வாகம் ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல, இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என தெரிவித்தார்.

 

  • 2

VIDEOS

Recommended