• முகப்பு
  • சென்னை
  • மதுரவாயல் அருகே பழைய விளையாட்டு உபகரணங்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து.

மதுரவாயல் அருகே பழைய விளையாட்டு உபகரணங்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து.

சுந்தர்

UPDATED: May 6, 2024, 4:34:47 PM

Chennai District News 

மதுரவாயல் அடுத்த வானகரம், பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திருவிழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு உபகரணங்களான ராட்டினம் மற்றும் ஆக்டோபஸ் ராட்டினம் உள்ளிட்ட ராட்டினங்களுக்கான உபகரணங்கள் இந்த பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று மதியம் திடீரென இந்த கிடங்கில் இருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விளையாட்டு உபகரணங்கள் ஒவ்வொன்றிலும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது

மேலும் கரும்புகை வின்னை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்ததால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வெயிலின் தாக்கமும், நெருப்பின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த கிடங்கில் இருந்த பழைய விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

அது மட்டுமின்றி இதன் அருகிலேயே பெட்ரோல் பங்கும் இருந்த நிலையில் தீ அந்த பகுதிக்கு பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

  • 4

VIDEOS

Recommended