• முகப்பு
  • சென்னை
  • மதுரவாயலில் வழி தெரியாமல் சென்ற தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்.

மதுரவாயலில் வழி தெரியாமல் சென்ற தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்.

சுந்தர்

UPDATED: May 16, 2024, 10:51:09 AM

Today Chennai News In Tamil

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், ராஜூவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்(29), இவரது மனைவி பார்வதி(27), இருவரும் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் இருவரும் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இவர்களது மகள் சங்கீதா(5), மகன் கவுதம்(4), ஆகிய இருவரும் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும் பிள்ளைகள் கிடைக்காத நிலையில் பதறி போய் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Chennai News In Tamil

இந்த புகாரின் பேரில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் உடனடியாக காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்ததோடு பெற்றோர்களிடம் இருந்த காணாமல் போன சிறுவர்களின் புகைப்படங்களை வாங்கி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனத்.

இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது அக்காவின் கையை பிடித்து கொண்டு தம்பி நடந்து சென்றதும் தெரியவந்தது

Breaking Chennai News In Tamil

தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொண்டே சென்ற நிலையில் போரூர் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் மீட்டு வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் மதுரவாயல் போலீசார் அங்கு சென்று பார்த்த போது காணாமல் போன சிறுவர்கள் போரூர் போலீஸ் நிலையத்தில் போலீசார் மீட்டு வைத்திருந்தது தெரியவந்தது

போலீசார் விசாரணையில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் கடைக்கு செல்வதற்காக சிறுவர்கள் இருவரும் நடந்து சென்ற நிலையில் வழி தெரியாமல் போரூர் ஆற்காடு சாலை வரை நடந்த சென்றதும் அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தது தெரியவந்தது

இதையடுத்து சிறுவர்கள் இருவரும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காணாமல் போன சிறுவர்களை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended