• முகப்பு
  • சென்னை
  • காவல்துறையினரை தாக்க முயற்சி செய்த சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை தாய் மாமன்

காவல்துறையினரை தாக்க முயற்சி செய்த சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை தாய் மாமன்

நெல்சன் கென்னடி

UPDATED: May 29, 2024, 1:24:39 PM

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் 10வது தெருவை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் அவரது காதலி காவியா என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்

இதை பார்த்த கவியாவின் முன்னாள் காதலன் சரண்ராஜ் என்பவர் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு நடைபெறுவதாக காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்துள்ளது

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு ஆர்கேநகர் H6 ஜிப்சி வாகனப் பொறுப்பு அதிகாரி மோகன் தலைமையில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது மது போதையில் இருந்த சிறுவன் தரக்குறைவாக பேசி காவலரின் சட்டையைப் பிடித்து தகராறு செய்துள்ளான்

அவனுக்கு உறுதுணையாக தந்தை விஸ்வநாதன் தாய்மாமன் சங்கர் மற்றும் அவரது தாயார் தமிழரசி ஆகியோர் இருந்துள்ளனர்

இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பி சென்ற சிறுவன் மீனாம்பாள் நகரில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளி பிரச்சனை செய்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிறுவனையும் அவனது தந்தை விஸ்வநாதன் வயது 40 தாய் மாமன் சங்கர் வயது 36 ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து ஒப்படைத்தனர்

சிறுவனின் தாயார் தமிழரசியை தேடி வருகின்றனர் மேலும் மூவர் மீது பணி செய்ய விடாமல் காவல்துறையை தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended