• முகப்பு
  • சென்னை
  • போதை மாத்திரை செல்போன் ஆப் மூலம் வாங்கிய நான்கு பேர் கைது.

போதை மாத்திரை செல்போன் ஆப் மூலம் வாங்கிய நான்கு பேர் கைது.

நெல்சன் கென்னடி

UPDATED: May 18, 2024, 1:00:07 PM

கொருக்குப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது 

இதனை அடுத்து தனிப்படை போலீசார் கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 1வது தெருவை சேர்ந்த கணேஷ் (வயது 21) என்பவர் வீட்டை சோதனை செய்தபோது போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இது தொடர்பான விசாரணையில் கணேஷ் கூட்டாளிகளான தண்டையார்பேட்டை நேரு நகர் 14வது தெருவை சேர்ந்த ராஜேஷ் (22) இவர் மீது 2 கொலை முயற்சி உட்பட 4 வழக்குகள் உள்ளது

அதே பகுதியில் ரஞ்சித் (27) இவர் மீது 2 வழக்குகள் உள்ளது

செங்குன்றம் காவாங்கரைச் சேர்ந்த உதயகுமார் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து மை டாட் என்ற செயலி மூலம் போதை மாத்திரைகள் ஆண்லைனில் 10 அட்டை ரூபாய் 3500 முதல் 4500 வரை கொடுத்து வாங்கி அதை ஒரு அட்டையை ரூபாய் 2000 க்கு விற்றது தெரிந்தது.

மேலும் அவர்களிடமிருந்து 3 கத்திகள், 1110 மாத்திரைகள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் ராஜேஷ், ரஞ்சித், கணேஷ், உதயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

VIDEOS

Recommended