பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 200 கிலோ குட்கா.

S.முருகன்

UPDATED: May 22, 2024, 6:30:46 PM

சென்னை மதுரவாயல் அருகே பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 200 கிலோ குட்கா மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் வாகன சோதனையில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது கொரியர் பார்சல் ஏற்றி வந்த மினி லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் 200 கிலோ குட்கா பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்தி வந்ததாக பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 200 கிலோ குட்கா, ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம், மினி லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்னர்.

விசாரணையில் பெங்களூரில் இருந்து குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended