• முகப்பு
  • சென்னை
  • ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன் சென்னை காவல் ஆணையர் அருண். எடுப்பாரா ?

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன் சென்னை காவல் ஆணையர் அருண். எடுப்பாரா ?

நெல்சன் கென்னடி

UPDATED: Jul 8, 2024, 6:04:08 PM

Latest and Breaking Chennai News 

காவல்துறையில் உள்ள ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகள் கட்டுப்படுத்தப்படும் - சென்னையின் புதிய காவல் ஆணையராக பதவியேற்ற ஏடிஜிபி அருண் ஐ.பி.எஸ் பேட்டி.

110வது சென்னை காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகரத்திற்கு நான் புதிதல்ல; சென்னை காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளேன்.

Today Chennai News in Tamil

குறிப்பாக ரவுடிசத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பேன். 

அதேபோல காவல்துறையில் உள்ள ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை களைய முன்னுரிமை கொடுப்பேன்.

காவல்துறையில் பல பொறுப்பு உள்ளது. சென்னையில் பல பொறுப்புகளின் பணியாற்றி உள்ளேன். இது ஒரு கூடுதல் பொறுப்பாக அமைந்துள்ளது. 

Latest Chennai News Headlines

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என புள்ளிவிவரங்கள் மூலமாக தான் தெரியவரும். குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் அதை தடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டே தான் இருக்கிறோம்.

புள்ளிவிவரங்களில் தமிழகம் மற்றும் சென்னை காவல்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்து தான் உள்ளது. இருப்பினும் அதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டே தான் வருகிறோம்.

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு, அதை விசாரித்து சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பேன்.

Chennai Police Commissioner Arun

தினமும் புது திட்டங்களை அறிவிப்பதால் ஒன்னும் நடக்க போவதில்லை எனவும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்றினாலே குற்றங்கள் குறையும் என அவர் தெரிவித்தார்.

ரவுடியிசத்தை கட்டுப்படுத்த என்கவுண்டர் இருக்குமா என்ற கேள்விக்கு, என்கவுண்டர் கிடையாது, ரவுடிகளுக்கு என்ன மொழி புரியுமோ? அந்த வகையில் நடவடிக்கை இருக்கும் என அதிரடியாக பேசினார். 

Latest Chennai District News 

மேலும், எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி எனவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என அவர் கூறினார்.

(பேட்டி : அருண் ஐ.பி.எஸ் - சென்னை காவல் ஆணையர்.)

அவர் கூறியது போல் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

Recommended