• முகப்பு
  • சென்னை
  • சென்னை எம் எஃப் எல் சாலை சந்திப்பில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.

சென்னை எம் எஃப் எல் சாலை சந்திப்பில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.

நெல்சன் கென்னடி

UPDATED: May 18, 2024, 10:42:50 AM

சென்னை ஆண்டார்குப்பம் பகுதியில் இருந்து மாதவரம் செல்வதற்காக இரண்டு பெண்கள் கை குழந்தையுடன் ஆட்டோவில் சென்றுள்ளனர்

அப்போது சென்னை எம் எஃப் எல் சந்திப்பின் அருகே சென்டர் மீடியா என்று அழைக்கப்படும் சிமெண்ட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது இரண்டு நாட்களாக சென்னையில் மழை பெய்து வருவதால் சிமெண்ட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை கவனிக்காமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்

இதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் கை குழந்தை படுகாயம் அடைந்து போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் குழந்தை, இரு பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended