தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலி நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

குமரவேல்

UPDATED: Oct 25, 2023, 8:58:53 AM

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும் உடனடியாக நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று 24-10-2023 செய்தி வெளியிட்டிருந்தோம்.

https://thegreatindianews.com/news/school-college-students-and-the-public-are-afraid-of-not-burning-streetlights-in-the-municipality-of-nellikuppam

அதனைத் தொடர்ந்து இன்று 25-10-2023  காலை நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன் உத்தரவின் பேரில் நகராட்சின் மின் ஊழியர்கள் நெல்லிக்குப்பம் நகராட்சி 1வது வார்டு விஸ்வநாதபுரம் பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உடனிருந்தார்.

செய்தி வெளியிடப்பட்ட ஒருசில மணி நேரத்திற்குள் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெறிவித்தனர்.

ஆகையால் மக்களின் அன்றாட பிரச்சினைகளில் சமரசம் ஏதுமின்றி உடனடியாக மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுத்த ஆணையர் கிருஷ்ணராஜன் அவர்களுக்கு நம் பத்திரிகை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • 18

VIDEOS

Recommended