• முகப்பு
  • ஆன்மீகம்
  • உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

ஜெயராமன்

UPDATED: May 23, 2024, 6:34:31 AM

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும்.. பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான...

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழிதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது .

இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா 22.05.24 முதல் 24.05.24 வரை மூன்று தினங்கள் நடைபெறுகிறது.

ஒரே நேரத்தில் 800 பேர் அளவிற்கு பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட தெப்பத்தில் 400 நபர்கள் வரை பொதுமக்கள் பயணிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக ஸ்ரீ பார்வதி உடனுறை கல்யாண சுந்தரர் சுவாமி... துர்காலயா சாலையில் உள்ள தெப்ப உற்சவ மண்டபத்திலிருந்து புறப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து தெப்பத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து.. கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமான கமலாலய திருக்குளத்தில் தெப்பம் உலா வந்தது.

மின்னொளியில் ஜொலிக்கின்ற தெப்பம் நாளொன்றுக்கு கமலாலய குளத்தின் நான்கு கரைகளைச் சுற்றி மூன்று முறை வலம் வரும். 

மூன்று நாட்களும் நடைபெறும் தெப்ப திருவிழாவில் இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட திருவாரூர் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தெப்பத்தினை கண்டு களித்தனர்.

 

VIDEOS

Recommended