• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலையில் சித்திரை மாத பௌர்ணமியொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் சித்திரை மாத பௌர்ணமியொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமார்

UPDATED: Apr 16, 2024, 12:36:17 PM

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான விசேஷங்களை உள்ளடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும்.

வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார்.

வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, 24ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, 23ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்க்கிறது.

VIDEOS

Recommended